Aaha Kalayanam: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கௌதமின் முகத்திரையை அனைவரும் முன்பும் மகா கிழித்துள்ளார் எனவே இதனால் கௌதம் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார்.
அதாவது ஐஸ்வர்யா கௌதம் பேச்சை கேட்டு மண்டபத்தில் இருந்து சென்ற நிலையில் இதனால் அனைவரும் ஐஸ்வர்யாவை தவறாக பேசி வந்தனர். மேலும் ஐஸ்வர்யாவிற்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர்கள் முடிவெடுத்த நிலையில் ஐஸ்வர்யாவை பொண்ணு பார்ப்பதற்காக வந்த நேரத்தில் அனைவரும் முன்பும் மயங்கி விழுந்து விடுகிறார்.
எனவே ஐஸ்வர்யாவை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை டாக்டர் என்பதால் அவர் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதை ஒட்டுமொத்த குடும்பத்தினர்கள் முன்பாகம் சொல்லிவிட்டு இந்த கல்யாணம் நடக்காது என கூறிவிட்டு கிளம்பி விடுகின்றனர்.
இவ்வாறு ஐஸ்வர்யா கௌதமை நம்பி அனைத்தையும் செய்த நிலையில் தற்போது கௌதம் ஐஸ்வர்யாவை கண்டு கொள்ளவில்லை. அப்படி சூர்யா மகாலட்சுமி இருவரும் கௌதமின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துகின்றனர்.
எனவே இந்த நேரத்தில் மண்டபத்திற்கு வந்த ஐஸ்வர்யா அனைவரும் முன்பும் உண்மையை கூற ஆனால் கௌதம் இதனை மறுக்கிறார். அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மண்டபத்தில் அனைவருக்கும் முன்பும் ஐஸ்வர்யா கௌதம் தான் என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்காத நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னாரு.
என் மனச மாத்தி மண்டபத்துல இருந்து என கூட்டிட்டு போயிட்டாரு இதனைக் கேட்ட கௌதம் போய் இதை யாரும் நம்பாதீங்க என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே மகாலட்சுமி கோவமாக செட் ஆப் கௌதம் ஜஸ்ட் செட் ஆப் என்று கத்த உடனே மேடை ஏறி ஐஸ்வர்யா கௌதமியின் மாலையைப் பிடித்து சண்டை போடுகிறார்.
இதற்கு கௌதம் ஒரே ஒரு ஆதாரம் காட்ட சொல்லுங்க என்று கேட்க அதற்கு இதோ இருக்கு என்று மகாலட்சுமி ஐஸ்வர்யாவை கௌதம் அழைத்து சென்ற வீடியோவை காமிக்கிறார். எனவே இதனைப் பார்த்த சூர்யா கௌதமை அரைகிறார்.