இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி. இவர் ஆர்யா மற்றும் நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த ராஜா ராணி சீரியலின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இதுதான் இவர் இயக்கிய முதல் திரைப்படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தெறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களை எடுத்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகிறார் எனவே ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றுள்ளார்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலான அரபி குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் யூடியூபில் மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ரசிகர்கள் இந்த பாடலை விரும்பிக் கேட்டு வந்தாலும் அதற்கான அர்த்தம் தெரியவில்லை என கூறி வருகிறார்கள்.
இந்த பாடலை பாடியவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் அட்லி மற்றும் அவரின் மனைவி அவருடன் பணிபுரியும் ஒரு நபர் என அனைவரும் சேர்ந்து இந்த பாடலுக்கும் நடனமாடி உள்ளார்கள்.அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.