Adhik Ravichandran: மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது வாழ்க்கையை மாற்றியது அஜித் தான் என கூறியுள்ளார். இரும்புத்திரை படத்தின் மூலம் விஷால் நடிப்பில் வெளியான 7 திரைப்படங்கள் தொடர்ந்து கலவை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் இதனால் தனது மார்க்கெட்டை இழந்தார்.
இதனை அடுத்து இன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா ஆகியோர்கள் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்றவற்றிலும் வெளியாகியிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
எனவே மார்க் ஆண்டனி படத்திற்காக விஷால், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக் கொண்டனர். நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் விஷால். மேலும் மார்க் ஆண்டனி படம் ரிலீஸ் ஆவதற்கு லைகா நிறுவனம் தடை விதித்த நிலையில் பிறகு படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து திட்டமிட்டபடி மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் ஆதிக் ரவிச்சந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். செய்தி வாசிப்பாளர்களை சந்தித்து பேசிய இவர், இந்த சிறப்பான தருணத்தில் நடிகர் அஜித் குமாரை தான் நினைவில் கொள்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்த பொழுது தன்னுடைய ஜானரை மாற்றிக்கொள்ள தன்னை ஊக்குவித்தவர் அஜித் என்று தெரிவித்துள்ளார். மேலும் மார்க் ஆண்டனி படத்தை தான் இயக்க அஜித்தான் காரணம் எனவும் கூறியுள்ளார். இப்படத்திற்காக விஷால், எஸ்.ஜே சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் அனைவரும் தங்களுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளதாகவும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.