பிரபு மகளுக்கு வாழ்க்கை கொடுக்க இயக்குனர் ஆதிக் போட்ட கண்டிஷன்.. வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா.? உண்மையை உடைத்த பிரபலம்

Adhik Ravichandran Marriage
Adhik Ravichandran Marriage

Adhik Ravichandran Marriage: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகளை திருமணம் செய்து கொள்வதற்காக வரதட்சணை கேட்டது குறித்து பிரபலம் ஒருவர் பேட்டியளித்துள்ளார். நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

ஆதிக் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்ட பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபு தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு தங்கை மகன் குணாலுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தார்.

விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை என வாழ்க்கை கொடுத்த பிரபலங்கள்… இமான் முதல் ஆதிக் வரை யார் யார் தெரியுமா.?

சாப்ட்வேர் இன்ஜினியரான குணால் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார் எனவே திருமணமான உடன் ஐஸ்வர்யாவையும் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றார் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். குணாலை பிரிந்தவுடன் சென்னை வந்த ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோருடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் மேற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது. சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் பிறகு பெற்றோர் சமதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ஆதிக் ரவிச்சந்திரனுடன் மூன்று வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 5 சீரியல்கள் தான் நவம்பர் 2023ல் அதிகம் ரசிக்கப்பட்ட சீரியல்கள்… உங்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் லிஸ்டில் இருக்கிறதா..

இது ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முதல் திருமணம் இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இவர்களுடைய திருமணம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொள்ள ஆதிக் ரவிச்சந்திரன் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டாராம் அதாவது தன்னுடைய மகளின் திருமணத்தை பிரபு மிகப்பெரிய மாநாடு போல நடத்த ஆசைப்பட்டாராம் ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பிலிருந்து இந்த திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

ஆனால் வழக்கத்தை விட பிரம்மாண்டத்தை குறைத்துக் கொண்டு இந்த திருமணம் எளிமையாக நடந்தாலும் பிரபலங்களின் வருகை இந்த திருமணத்தை பேசக்கூடிய ஒன்றாக மாற்றிவிட்டது. அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்துக் கொண்ட தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவிற்கு பிரபு தரப்பில் இருந்து 500 கோடி ரூபாய் வரதட்சனை கொடுத்திருக்கலாம் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.