நான் சொன்னதை நீ செஞ்சிட்ட உனக்காக இதை செய்ய மாட்டேனா.. அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இளம் இயக்குனர்

Ajith
Ajith

Ajith : நடிகர் அஜித்குமாருக்கு ரசிகர்களையும் தாண்டி திரை பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட அஜித்குமார் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி.

படத்தில் அஜித் நடிக்க நடிக்க இருப்பதாக அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டது ஆனால் ஆறு மாதங்களை கடந்த பிறகும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை ஆனால் சமூக வலைதள பக்கங்களில் பரவும் செய்திகள் என்னவென்றால் படத்தின் ஷூட்டிங் துபாய், அபுதாபியில் நடக்கும் என்றும்..

கர்நாடகாவில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்கள்.! அஜித், விஜய்க்கு இடமில்லை

த்ரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த படமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.  மேலும் நடிகர், நடிகைகள் பெயர்களும் வருகின்றன அதன்படி த்ரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணையப் போகிறார் என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.  வலைப்பேச்சு யூடியூப் சேனலில்  இது குறித்து பேசி உள்ளனர் விலாவாரியாக பார்ப்போம்..

மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வெற்றிகண்ட ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகராம். நேர்கொண்ட பார்வை படத்தின் போது அஜித் – ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பல அட்வைஸ் கொடுத்தார் அதை ஏற்று தற்போது வளர்ந்து உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே அஜித்திடம் ஒரு கதையை கூறியிருந்தாராம்.

ஆனால் அஜித் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் அது நடக்க முடியாமல் போய்விட்டாதாம். தற்போது மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்திடம் ஒரு கதையைக் கூறி உள்ளாராம் அது ரொம்ப பிடித்துள்ளதால் நடிக்க இருப்பதாக கூறியுள்ளாராம் இந்த படத்தை ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் விடுதலை திரைப்படத்தை தயாரித்த கீழ் எல் குமார் தயாரிக்க உள்ளாராம்.

யோவ் லோகி நீ பாட்டுக்கு கெட்ட வார்த்தை பேச சொல்லிட்ட.. என் கிரகம் இந்த ஆளு கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டிய நேரம்.!

இந்த படத்திற்காக அஜித்திற்கு 150 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கி முடிந்த பிறகு தான் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி அமைத்து அடுத்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது என வலைப்பேச்சு சேனல் கூறி உள்ளது.