நேற்று பவுலின் ஜெசிகா என்ற நடிகை தனது வசிக்கும் வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் நடிகை பவுலின் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் நாசர் நடிப்பில் வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருக்குன்றம் அருகே உள்ள அன்னம்மாள் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை ஜெசிகா வசித்து வந்தார் இந்நிலையில் அவர் தனது அறையில் நேற்று மாலை திடீரென தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக ஜெசிகாவின் உடலை கைப்பற்றி சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவருடைய அறையில் ஒரு கடிதம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர் அதில் நான் ஒருவரை காதலித்து வந்தேன் ஆனால் அவர் என்னை காதலிக்கவில்லை என்னை வேண்டாம் என்று கூறிவிட்டார். இனிமேல் நான் வாழ்வதற்கு தகுதி இல்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகை ஜெசிகா என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் இதனை தொடர்ந்து ஜெசிகாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் இவருடைய தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று வேறு ஒரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலிருந்து திரையுலகினர் மீலாத நிலையில் தற்போது இளம் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.