A word like this from your mouth for two minutes of pleasure: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து சமீபத்தில் நான்காவது சீசனும் முடிவடைந்துவிட்டது.
இவ்வாறு நடைபெற்ற இந்த நான்காவது சீசனில் ஆரி, ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, கேப்ரில்லா, ஆஜித், சுசித்ரா, சோம்சேகர், ரேகா போன்ற பல்வேறு பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்கள்.
இவ்வாறு நடைபெற்ற இந்த போட்டியில் முதலிடத்தை பெற்று வெற்றி பெற்றவர்தான் ஆரி இவருக்கு 50 லட்சம் ரூபாயை பிக் பாஸ் நிகழ்ச்சியானது பரிசாக வழங்கியது. அதன்பிறகு இரண்டாம் இடத்தைப் பெற்றவர் தான் பாலாஜி இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரவுடிசம் செய்தாலும் இரண்டாம் இடத்தைப் பெற்றுவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியது மட்டுமல்லாமல் சனம் ஷெட்டியிடம் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு பல சர்ச்சைகளை கிளப்பி விட்டார். மேலும் சக போட்டியாளரான ஆரியுடன் பல முறை சண்டை போட்டது மட்டுமல்லாமல் அவரை மரியாதை குறைவாகவும் பேசியிருந்தார்.
இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அராஜகம் செய்த பாலாஜியை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் பலர் கூறியிருந்தாலும் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது ஒரு வியக்கத்தக்க விஷயம் தான். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் behaindwoods அவார்டு கிடைத்தது.
இவ்வாறு அவருக்கு கொடுத்த அந்த பெயரையும் புகழையும் அவர் திருப்பி கொடுப்பதாக சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மேடையில் பாலாஜி விருது வாங்கும் பொழுது நான் ரிவிவ் என்று சொல்லி மற்ற போட்டியாளர்களை தவறாக பேசாதீர்கள் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் நீங்கள் இவ்வாறு கூறுவது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவியூ சொல்றவங்க எல்லாம் காந்தியோ மதர் தெரசாவோ கிடையாது என கூறியிருப்பார் ஆனால் அந்த வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பவில்லை.
இவ்வாறு பேசியதைப் பார்த்த சனம் ஷெட்டி அவருக்கு பதில் பதிவு போட்டு உள்ளார் அவர் பேசியது என்ன வென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னையும் இல்லாத பெண்களை பற்றியும் அவதூறாக பேசிய நீ மற்றவர்களின் எதிர்காலத்தை பற்றி யோசிக்கிறியா என்று கேட்டுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் நீங்கள் தவறாக பேசும் பொழுதும் என்னை பற்றி அவதூறாக பேசிய பொழுது பச்சை பிள்ளைகளைப் பற்றி யோசித்தீர்களா..? இரண்டு நிமிட பெருமைக்காக இவ்வளவு கேவலமாக நடிக்கிறீர்களே என கூறி அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.