பிரபல நடிகர் மீது உள்ள சந்தேகத்தால் ரகசியமாக ஸ்பை வைத்த மனைவி.! கையும் களவுமாக மாட்டிக் கொண்ட தருணம்

actor
actor

பிரபல நடிகர் ஒருவர் திருமணம் ஆகி குழந்தை குட்டி என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர் ஒருவர் தன் மனைவியிடம் வசமாக சிக்கிக்கொண்டதை பற்றி தற்போது திரையுலகில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. திறமையான நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்ட அந்த நடிகர் தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

படம் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ அந்த நடிகருக்கு மட்டும் எப்படி இவ்வளவு திரைப்படங்கள் என சகா நடிகர்கள் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டு வருகின்றனர். சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடித்து வரும் அந்த நடிகர் சமீப காலங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இது போன்று ஏற்கனவே சக நடிகைக்கு வாய்ப்பு வாங்கி தந்ததற்கு பெரும் பிரச்சனையாக பேசப்பட்டது.

மேலும் அந்த பிரபல நடிகர் தன்னுடன் நடிக்கும் சக நடிகை உடன் தொடர்பில் இருப்பதாக அந்த நடிகரின் மனைவியின் காதில் போய் விழுந்தது. இதைக் கேட்ட அவருடைய மனைவி ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் தனது உறவினர்களை கூப்பிட்டு இதைப் பற்றி கூறியிருக்கிறார் இதனால் பதறிப் போன அந்த நடிகர் எவ்வளவு சொல்லியும் சுற்றி இருப்பவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்த அந்த நடிகர் தன் மனைவியின் காலில் விழாத ஒரு குறையாக கெஞ்சி அவரது மனைவியை சமாதானப் படுத்தினார். ஏற்கனவே இவர் பல கிசுகிசுவில் சிக்கியதால் அவருடைய மனைவி அவருக்கே தெரியாமல் ஒரு உளவாளியை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது போன்ற சேட்டைகள் செய்ததும் அவர் காதில் போய் விழவே அவர் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார். பின்னர் அவர் மனைவியை சமாதானம் செய்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சாந்தமாகி இருக்கிறார். இருப்பினும் மறுபடியும் ஏதாவது சேட்டைகள் செய்தால் விளைவு இன்னும் மோசமாக இருக்கும் என்று அந்த நடிகரை மிரட்டி இருக்கிறாராம் அவருடைய மனைவி.