ஒரு வாரம் கழித்து வடிவேல் பாலாஜி இறப்பு குறித்து பேசிய பிரபல தொகுப்பாளினி.! கொந்தளித்த ரசிகர்கள்.

vadivel balaji

சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றனர் அதற்கு காரணம் தொலைக்காட்சிகள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் மக்கள் தனக்கு பிடித்த பிரபலங்களை தொடர்ந்து பார்த்து கண்டுகளித்து வருகின்றனர் அதன் மூலம் அத்தகைய பிரபலங்கள் பல கோடி ரசிகர்களை கவரும் அதோடு மட்டுமல்லாமல் அடுத்த லெவலுக்கும் செல்வது வழக்கம்.அப்படி கலக்கப்போவது யாரு என்ற சீசனில் ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரை வரையிலும் பயணம் செய்து அவர்தான் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி.

இவரு கலக்கப்போவது யாரு சீசன் 4 ல் தனது பயணத்தை தொடர்ந்தார் ஆனால் அத்தகைய சீசனில் இவரால் டைட்டிலை பெறாவிட்டாலும் இவரது நடிப்பு திறமை மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சின்னத்திரையில் மேலும்  தனது நடிப்பு திறமையை இன் மூலம் மக்களை தொடர்ந்து மகிழ்வித்துக் கொண்டிருந்த இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரது இழப்பு சின்னத்திரையின் தாண்டி வெள்ளித்திரை மற்றும் பொது மக்களை பெருமளவில் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது இறப்பு செய்தியை அறிந்து பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் இறுதி ஊர்வலம் வரை சென்று அவரது உடலை அடக்கம் செய்தனர்.

சில பிரபலங்களும் இறுதி ஊர்வலத்திற்கும் வருவதில்லை அஞ்சலியும் செலுத்தாமல் காலம் கடந்த பிறகு அஞ்சலி செலுத்துவ அனுதாபங்களை தெரிவிப்பதுமாக இருந்து வருகின்றனர்.

அப்படி தற்பொழுது ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் தற்போது பிரபல நடிகையும் தொடர்பாளருமான விஜே ரம்யா அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது.

அவரை தற்பொழுது எத்தனை பேர் நினைக்கிறார்களோ இல்லையோ என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இன்று காலையில் கூட நான் அவரை நினைத்து இருந்தேன் என கூறினார் மேலும் அவருடன் இருந்த அனுபவம் குறித்தும் மேலும் பகிர்ந்தார்.

அத்தகைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இத்தனை நாள் கேட்காமல் இப்பொழுது ஏன் கேட்கிறார் என அவரை ஒருபக்கம் கேள்விகளின் மூலம் துளைத்து எடுத்து வருகின்றனர்.

image