பிரபல நடிகையை துரத்தி துரத்தி காதலித்த வில்லன்.! கடைசியில் அவர் மனதை உருக்கிய சம்பவம்…

villain
villain

சினிமாவில் நடிகராகவும் குணசத்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து பிரபலமான ஒரு நடிகர் முன்னணி நடிகையை காதலித்து ஏமாந்து போனதை அவரே ஒரு பேட்டியில் கூறி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அதன் பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிந்த அவர் சினிமாவில் பாதியில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகராக நடித்து வந்த பிரபல நடிகர் ஒருவர் பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில் ஆண்டனியாக வந்து அனைவரையும் மிரட்டியவர் நடிகர் ரகுவரன்.

இவர் பல திரைப்படங்களில் நடிகராக நடித்திருந்தாலும் பெரிய அளவிற்கு பேசப்படவில்லை ஆனால் இவர் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த அனைத்து படங்களிலும் இவருடைய வில்லத்தனம் ரசிகர்களை பெரிய அளவில் பேச வைத்தது. இதனை தொடர்ந்து இவர் 1987 ஆம் ஆண்டு கூட்டு புழுக்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை அமலா.

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது நடிகை அமலாவிடம் தன்னுடைய காதலை ரகுவரன் அவர்கள் கூறியிருக்கிறார். ஆனால் அமலா ரகுவரனின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரகுவரன் இது பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அனைத்தும் சரியாகிவிடவே 1996 ஆம் ஆண்டு ரோகினியை திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில காரணங்களால் இவர்களது திருமணம் பாதையில் முறிந்தது. அதேபோல நடிகை அமலா நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பல படங்களில் வில்லனாக நடித்து மக்களை பயத்தில் உருக வைத்த நடிகரின் மனதை பதரவிட்டாரே அமலா என்று கூறி வருகிறார்கள். ரகுவரன் தற்போது நம்மை விட்டு இல்லை என்றாலும் அவருடைய படம் காலா காலத்திற்கும் நாம் பேசும் பொருளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.