வேட்டி கூட கட்ட முடியாமல் தவிக்கும் வெண்ணிலா கபடி குழு பட நடிகர்.! இவருக்கா இப்படி நிலைமை.?

vennila-kabadi-kuzhu
vennila-kabadi-kuzhu

தமிழ் சினிமாவில் கபடி போட்டியை மையமாக வைத்து உருவாக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். அதன் பிறகு குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல  போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

அதன் பிறகு நீண்ட ஆண்டுகளாக சினிமாவில் ஹரிவைரவன் தோன்றவே இல்லை அவருக்கு என்னதான் ஆச்சு என்றும் தெரியவில்லை இந்த நிலையில் தற்போது ஹரிவைரவன் பிரபல பத்திரிகை சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

hari vairavan
hari vairavan

சினிமாவில் நடித்த பல பிரபலங்கள் தற்போது என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் ஹரி வைரவன்  மிகவும் உடல்நிலை சரியில்லாமல் சாவின் விளிம்பில் நிற்கிறார்.

கிட்டத்தட்ட 11 வருடங்களாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஹரிவைரவன் ஒரு கட்டத்திற்கு மேல் சரியாகிவிடும் என்று எண்ணி இருந்தார். ஆனால் சக்கரை அதிகமானதால் அவரின்  கை, கால் வீங்க ஆரம்பித்துவிட்டது அதை பார்த்து அவருடைய மனைவி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரி வைரவனின் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவர் அவரிடம் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார் அதற்கு 8000 செலவாகும் எனவும் கூறியிருக்கிறார் அந்த 8000 பணம் கூட இல்லாமல் இருந்ததாகவும் அதன் பிறகு அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்ததாகவும் ஹரி பைரவனின் மனைவி கூறியுள்ளார்.

hari vairavan
hari vairavan

இப்படியே நாட்கள் நகர்ந்து போக ஒரு நாள் ஹரிவைரவனின் நண்பர் வீட்டில் விசேஷத்திற்கு செல்லக்கூடிய கட்டாயம் வந்தது அப்போது அங்கு சென்று அவரின் நம்பர் வீட்டில் தங்க முடியாது என்று அவருடைய மனைவியிடம் கூறியிருக்கிறார் அதன் பிறகு ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளாராம்.

பின்னர் ஹோட்டலில் இருவரும் ஒரு நாள் தங்கி இருந்த நிலையில் திடீரென ஹரி வைரவனின் கால் வீங்கியுள்ளது அதுமட்டுமல்லாமல் அவருடைய கால் வீங்கினால் காலுக்கு தலகாணியை வைத்தால் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார் அவருடைய மனைவி இதனால் ஹரி வைரவனின் காலுக்கு அடியில் தலையணையை வைத்து விட்டு தூங்கி இருக்கிறார். பிறகு ஒரு மூணு மணி அளவில் எழுந்திருத்து பார்க்கும் போது ஹரியின் கால் கீழே தொங்கியவாறு இருந்ததாம்.

அதை கவனித்த ஹரி வைரவனின் மனைவி அவருடைய காலை தூக்கி மேலே வைத்துவிட்டு தூங்கிவிட்டாராம் பிறகு காலையில் எழுந்திருத்து பார்க்கும் போது அவர் மயக்கத்தில் இருந்ததாகவும் என்ன செய்வதென்றே தெரியாமல் அவருடைய அம்மாவிற்கு போன் செய்து அவருடைய தாய் மாமனை அந்த ஹோட்டலுக்கு வர வைத்துள்ளார் அதன் பின்னர் 108க்கு போன் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

hari vairavan
hari vairavan

நீண்ட நேரம் கழித்து ஹரி பைரவன் கண் விழித்தார் அதன் பிறகு வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதைப் பற்றி ஹரி வைரவன் அந்த பேட்டியில் விரிவாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வரை  நடிகர் சூர்யாவின் சகோதரரான கார்த்தி, சூரி, மற்றும் அப்புகுட்டி ஆகியோர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். அதிலும் கார்த்தி அவர்கள் ஒரு நாள் கூட போன் செய்யாமல் இருந்ததே இல்லை எங்களை அப்படி பார்த்துக் கொண்டார் என்று ஹரிவைரவனின் மனைவி கூறியுள்ளார்.

தற்போது ஹரிவைரவன் அவர்களால் நடக்க கூட முடியவில்லையாம் அது மட்டுமல்லாமல் வேஷ்டி கூட அவருடைய மனைவிதான் கட்டி விடுவாராம் இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரி வைரவன்.