இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் அவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது.
இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது துணிவு படத்தின் பட குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் துணிவு படத்தின் இயக்குனர் எச் வினோத் மற்றும் மஞ்சுவாரியர் ஆகிய இருவரும் கலைஞர் டிவிக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்போது படபிடிப்பு தளத்தில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை கூறி இருந்தார்கள் அதனை தொடர்ந்து அப்போது இயக்குனர் ஹெச் வினோத் இடம் நோ கட்ஸ் நோ குளோரி அப்படி என்றால் என்ன? அதனுடைய அர்த்தம் என்ன என்று கேட்டிருக்கிறார் இதற்கு பதில் அளித்த ஹச் வினோத் இதுதான் துணிவு என்று கூறியுள்ளார் இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் துணிவு படத்தில் நடிகர் அஜித் அவர்கள் ஒரு மனிதன் எதை செய்ய முடியாது என்று நினைக்கிறானோ அதை செய்து காட்டி ஒரு வில்லத்தனமாக நடித்திருப்பார் என்று கூறியுள்ளார் அப்பவே ரசிகர்கள் மத்தியில் துணிவு படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது அதிக சஸ்பென்ஸ் இருப்பதாக வேற கூறியுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சமுத்திரகனி அவர்கள் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது துணிவு படத்தின் படபிடிப்பின்போது நடந்த சுவாரசியமான பல தகவல்களை ஷேர் செய்தார். அப்போது துணிவு படத்தில் கடைசி காட்சியில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக கூறியுள்ளார். இதுவரைக்கும் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இவர் கூறியதைக் கேட்ட உடனே படம் இப்போவே வெளியானாலும் பரவாயில்லை என்று கூறி வருகிறார்கள்.