நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் போன்ற படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் படம் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் கொண்டாட வைக்கின்றன. அதிலும் குறிப்பாக இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சமூக அக்கரை உள்ள படங்களாக இருப்பதால்..
அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்திழுக்கின்றன. இதனால் தனுஷின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டுகின்றன. தற்போது இவரது நடிப்பு திறமை வேற லெவலில் இருக்கின்ற காரணத்தினால் ஹாலிவுட்டிலும் கால் தடம் பதித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.
கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் இப்பொழுது கார்த்திக் நரேன் உடன் கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் தான் மாறன். இந்த திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக மார்ச் 11 ஆம் தேதி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷுடன் கைகோர்த்து மாளவிகா மோகனன் நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரிய வருகிறது இந்த நிலையில் பட குழு பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறது அதில் ஒன்றாக மாளவிகா மோகனிடமும் பேட்டிகள் எடுக்கப்பட்டன.
அப்பொழுது உங்களுக்கு தனுஷ் நடித்த படங்களில் பிடித்த படங்கள் என்னென்ன என கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனுஷின் மூன்று திரைப்படங்கள் எனக்கு எப்பொழுதும் ஃபேவரட். முதலில் கர்ணன், அசுரன், மாரி இந்த மூன்று படங்களிலும் நடிகர் தனுஷின் நடிப்பு வேற லெவலில் இருக்கும் என கூறிய புகழ்ந்து பேசியுள்ளார்.