பிரபல நடிகையுடன் இணைந்து இரவு டின்னர் சாப்பிட ஏ. ஆர். ரகுமானின் மகன் – இணையதளத்தில் கலக்கும் புதிய புகைப்படம்

rahman-and-son

ஏ ஆர் ரகுமான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற திரைப்படத்தில் இசை அமைத்து தனது பயணத்தை தமிழ் சினிமா உலகில் தொடங்கினார். இப்போதைய கால கட்டத்தில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, அனிருத்  போன்ற பிரபலங்கள் இருந்தாலும் தனது தனித்துவமான இசையின் மூலம் கோடானகோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இவரது பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்துப்போன பாடல்களாக இருந்ததால் இவர் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் இசை அமைத்தார் அதிலும் இப்போது ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து பல மொழி,பல படங்களுக்கு இசையமைத்து வருவதால்..

பேரையும் புகழையும் பெற்ற உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். தமிழில் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்த வண்ணமே இருக்கிறார் இது வரையிலும் அவர் ரஜினி, விஜய் போன்ற டாப் ஜாம்பவான்கள் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது கூட அவரது கையில் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு போன்ற பல படங்கள் கைவசம் வைத்து பணியாற்றி வருகிறார் ஏ ஆர் ரகுமான். இவரை தொடர்ந்து அவரது மகனும் தற்போது இசைத்துறையில் பாடகராக வளர்ந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன்.

தென்னிந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் இணைந்து இரவு டின்னர் சாப்பிட்டு உள்ளார் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன்.  இணையதளத்தில் கலக்கும் புதிய புகைப்படம்.புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தற்பொழுது லைக்குகளையும்,  கமெண்ட்டுகளையும் கொடுத்து வருகின்றனர்.

nayanthara and ameen
nayanthara and ameen