வானத்தில் பறந்த “துணிவு” பேனர் – ஆட்டத்தை ஆரம்பித்த படக்குழு.!

ajith-
ajith-

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகும் உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர் அந்த வகையில் நடிகர் அஜித்குமார் தனது ரசிகர் மன்றத்தை கலைத்திருந்தாலும் ரசிகர்கள் அவரை விட்டு நீங்காமல் பக்கபலமாக இருக்கின்றனர்.

அதனால் அஜீத் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது ரசிகர்களும் கொண்டாடி தீர்க்கின்றனர். அந்த வகையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் சூப்பராக நடித்து முடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் அவருடன் இணைந்து மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான சிபி அமீர் பாவணி போன்றவர்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வெளிவர இன்னும் சில நாட்கள் இருந்தாலும் அதற்கு முன்பாகவே படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது கடைசியாக வெளிவந்த கேங்ஸ்டா பாடல் வேற லெவலில் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது இப்படி இருக்கின்ற நிலையில் வெளிநாடுகளில் துணிவு படத்தை லைக்கா நிறுவனம் தான் பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது.

துணிவு படத்தின் பிரமோஷன்காக ஒரு வித்தியாசமான முயற்சியை செய்துள்ளது அது என்னவென்றால்..  துபாயில் ஸ்கை டிரைவர் மூலம் துணிவு படத்தின் பேனரை வானத்தில் பறக்க விட்டு அசத்தி உள்ளது. அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த பேனரை..