தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் இதுவரை 168 திரைப்படம் நடித்துள்ள நிலையில் அவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு எல்லா கதாபாத்திரத்திலும் நடித்து முடித்துள்ளார் ரஜினி. தற்போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அதிகம் பொது நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் கலந்து கொள்வதில்லை..
மேலும் ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் பின்பு யோசனை செய்து அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபட போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவரது மூத்த முதல் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் விவாகரத்து செய்தியை கேட்டு கூட மிகவும் மன உளைச்சலில் இருந்தார் ரஜினி.
ஒரு பக்கம் அவரது 169 திரைப்படத்தில் நெல்சன் உடன் இணைந்து நடிக்க உள்ளார் அதற்கான படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள யோகாத சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் மேடையில் பல விஷயங்களை ஓப்பனாக ரஜினி பேசி உள்ளார். அவர் பேசியதாவது என்னை பெரிய நடிகர் என்று எல்லோரும் சொன்னார்கள் ஆனால் அது எனக்கு பாராட்டா அல்லது விமர்சனமா என்று தெரியவில்லை நான் எத்தனையோ படங்களை நடித்திருக்கிறேன் ஆனால் இதுவரை எனக்கு பிடித்த படம் என்றால் அது ராகவேந்திரா மற்றும் பாபா படம்என கூறியுள்ளார்.
இந்த இரண்டு படங்கள் மூலம் நான் பலவற்றை கற்றுக் கொண்டேன் எனவும் கூறினார். மேலும் பேசி அவர் பணம் புகழ் எல்லாமே என்னிடம் இருக்கு பல பெரிய பெரிய அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என எல்லாவற்றையும் பார்த்து விட்டேன் ஆனால் நிம்மதி என்பது 10% கூட இல்லை என்று கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது ரஜினி ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.