சினிமா புதியதை நோக்கி ஓட ஓட நடிகர், நடிகைகளும் தன்னை அப்டேட் செய்து கொள்கின்றனர் அந்த வகையில் இயக்குனர், ஹீரோக்கள் போன்ற பலரும் தற்பொழுது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பலர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் அதிக சம்பளமும் வாங்குகின்றனர்.
அதில் முதலவதாக தமிழ் சினிமா உலகில் பார்க்கப்படுவது விஜய் சேதுபதி தான் தொடர்ந்து ஹீரோவாக நடித்து ஓடிக்கொண்டிருந்த இவர் அண்மைக்காலமாக டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது ஒரு படத்தில் நடிக்க 20 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறார்.
தமிழில் மட்டும் தான் 20 கோடிக்கு மேல்.. ஹிந்தியில் 30 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. இவரை போலவே மலையாள நடிகர் பகத் பாசில் தொடர்ந்து டாப் ஹீரோயின் படங்களில் வில்லனாகவும், குணச்சிதர கதாபாத்திரங்களிலும் நடித்து மார்க்கெட்டை தென்னிந்திய சினிமாவில் உயர்த்திக் கொண்டு ஓடுகிறார்.
இவர்கள்தான் இப்படி என்றால் இவர்களைப் போலவே பல்வேறு இயக்குனர்களும், முன்னணி ஹீரோகளும் தற்போது வில்லன் அவதாரம் எடுக்க ரெடியாகி உள்ளனர். தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏற்கனவே சஞ்சய் தத் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களும் இணைந்தார் மேலும் மலையாள நடிகர் பிரித்திவிராஜ்க்கு பதிலாக விஷால் இந்த படத்தில் கமிட் ஆகி உள்ளார் என சொல்லப்படுகிறது.
விஷால் வில்லனாக நடிக்க அதிக சம்பளம் கேட்டுள்ளார் அதேபோல கௌதமேனன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 30 கோடி சம்பளம் கேட்கிறாராம்.. வில்லன் ரோலில் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்டி வரும் இவர் திடீரென இவ்வளவு சம்பளம் கேட்பது தற்போது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்..