கல்லூரி ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து குளிக்கும் கல்லூரி மாணவிகளை அதாவது சக மாணவிகளை வீடியோ எடுத்து அதை தனது காதலனுக்கு அனுப்பிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரபல நடிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவிகள் தங்கும் ஹாஸ்டலில் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி ரகசியமாக பாத்ரூமில் கேமரா வைத்து குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து அதை தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார்.
கல்லூரி மாணவி கிட்டத்தட்ட 60 மாணவிகள் குளிக்கும் வீடியோவை அவருடைய காதலனுக்கு அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் தற்போது அந்த கல்லூரியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் கிட்டத்தட்ட கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் சம்பந்தப்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோ சமுக வலைதளத்தில் வெளியாகி வைரலானதால் ஒரு சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் காட்டு தீ போல் பரவும் இந்த சம்பவம் குறித்து பிரபல நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் மிகவும் மோசமான சம்பவம் இதற்குப் பிறகு யாருக்கும் நடக்க கூடாது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது நாம் சகோதரிகளுக்கு துணையாக இருக்க வேண்டிய நேரம் இதுதான் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இது போன்ற சோதனைகள் இனிமேல் நடக்கக்கூடாது இதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை பொறுப்புடன் செய்யவேண்டும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Something that happened in Chandigarh University is very unfortunate. It’s time for us to stand with our sisters and set an example of a responsible society. These are testing times for us, not for the victims.
Be responsible 🙏— sonu sood (@SonuSood) September 18, 2022