கமலஹாசனை நினைத்து உருகி உருகி எழுதிய கதை.. இயக்குனர் ராம் வாழ்க்கையில் நடந்த சோகம்

Ram
Ram

Ram : மக்கள் மற்றும் ரசிகர்களை சிந்திக்க வைக்கும் வகையில் படங்களை எடுத்து வருபவர் இயக்குனர் ராம். முதலில் “கற்றது தமிழ்” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார். அதில் ஜீவா, அஞ்சலி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். முதல் படமே பல விருதுகளை வாரி குவித்தது ஜீவாவுக்கு இந்த படம் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013ஆம் ஆண்டு “தங்கமீன்” படத்தை இயக்கி நடித்திருந்தார் இந்த படமும் பல விருதுகளை வாங்கி நல்ல பெயரை பெற்று தந்தது 2017 ஆம் ஆண்டு ஆண்ட்ரியா, வசுந்தராவின் நடிப்பில் வெளியான தரமணி படமும் சக்க போடு போட்டது. அதனைத் தொடர்ந்து பேரன்பு படத்தை இயக்கினார்.

நிலாவை பக்கத்தில் பார்த்தும் தூக்கி கொஞ்ச முடியாமல் தவிக்கும் கணேஷ்.. நடுராத்திரியில் பதறி அடித்து ஓடும் செழியன் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

சைக்கோ படத்தில் நடித்திருந்தார் 2023-ல் கைவசம் “ஏழு கடல் ஏழு மலை” படத்தை எடுத்து வருகிறார். இதில் ஹீரோவாக நிவின் பாலி நடிக்க சூரி, அஞ்சலி போன்றவர்களும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுது. இப்படி சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி கண்டு வரும்  ராம் இன்று பிறந்தநாள் காணுகிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு இயக்குனர் ராம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது.. கற்றது தமிழ் திரைப்படத்தின் கதையை கமலஹாசனை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினாராம் ஆனால் அப்பொழுது ராம் உதவி இயக்குனராக இருந்ததால் கமலஹாசனை சந்திக்க கூட முடியவில்லை..

ஹெல்ப் பண்ண வந்த ஆதியை அலறவிட்ட அர்ஜுன்.! பிச்சை எடுக்கிற நிலைமையில் தான இருக்கீங்க என தமிழைஅசிங்கப்படுத்தும் ராகினி புருஷன்…

அதன் பிறகு ஜீவாவிடம் இந்த கதையை கூறி இருக்கிறார் கற்றது தமிழ் கதை ஜீவாவுக்கு ரொம்ப பிடித்து போவது உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம். அப்பொழுது பல பேட்டிகளில் கற்றது தமிழ் படம் குறித்து பேசும் போது கமலஹாசன் மாதிரியான ஒரு நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஜீவா மிகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என அவரையும் பாராட்டி உள்ளாராம்.