ரஜினிக்காக ஆசை ஆசையாய் எழுதப்பட்ட கதை – கடைசி நேரத்தில் விஜயகாந்த் நடித்து படம் ஹிட்.! அட இப்படி ஒரு படத்தை சூப்பர் ஸ்டார் மிஸ் பண்ணிட்டாரே..

rajini-and-vijayakanth-
rajini-and-vijayakanth-

80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் ரஜினி, விஜயகாந்த். இவர்கள் இருவரும் வித்தியாசமான ஒரு ரூட்டை பிடித்து ஓடினர் ரஜினி தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த் கிராமப்புற பக்கத்தில் சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நகர்புறங்களில் ரஜினிக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும் கிராமப்புறங்களில் விஜயகாந்த்க்கு தான் மிகப்பெரிய ஒரு மார்க்கெட் இருந்தது இருவரும் தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து அசத்தினர் இருவரும் படங்களில் தொடர்ந்து மோதி கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் மேலும் சினிமாவிலும் அவர்களிடையே விட்டுக் கொடுத்து போவதையும் வழக்கமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி நடிகரும் இயக்குனருமான ஆர் சுந்தர்ராஜன் ரஜினிக்காக பார்த்து பார்த்து எழுதிய கதையில் கடைசியில் ரஜினிக்கு பதிலாக விஜயகாந்த் நடித்து வெற்றி கண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் இயக்குனர் சுந்தர்ராஜன் அம்மன் கோயில் கிழக்காலே என்ற படத்தின் கதையை ரஜினிக்காக எழுதி உள்ளார்.

ஆனால் ரஜினியை சந்தித்து கதையை கூற முடியாமல் போனதால் வேறு வழியின்றி கடைசி நேரத்தில் விஜயகாந்த்க்கு கதையை சொல்லி கமிட் செய்தார் படம் 1986 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியானது.  படம் கிளாசிக் ஹிட் அடித்து அசத்தியது. இந்த படத்தில் விஜயகாந்த் உடன் கைகோர்த்து ராதா, செந்தில், ராதாரவி, வினு சக்கரவர்த்தி, ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.

இந்தப் படத்திற்கு முன்பே விஜயகாந்த்தும் ஆர் சுந்தர்ராஜன் இணைந்து வைதேகி காத்திருந்தாள் என்ற படத்தில் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்துடன் மோதி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.