அஜித்தை அப்படியே உரித்து வைத்திருக்கும் உருவ சிலை.. மாஸ் பண்ணும் தல ரசிகர்கள்.!

ajith

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன அந்த வகையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க அஜித் மீண்டும் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் கைகோர்த்து துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் யோகி பாபு போன்ற பல நடித்துள்ளனர் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் இந்த படத்தில் ஆக்சன், செண்டிமெண்ட் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது அதற்கு முன்பாகவே அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர், கடைசியாக சில்லா சில்லா பாடல் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் வைரலாகி படத்தின் எதிர்பார்ப்பை சற்று அதிகரிக்க வைத்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்றே இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது நடிகர் அஜித்திற்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அஜித் படத்தில் வந்து சும்மா நின்னால் போதும் அதைப் பார்த்து கொண்டாடுவோம், உற்சாகம் அடைவோம் என ரசிகர்கள்  சொல்லி இருக்கின்றனர்.

அந்த அளவிற்கு அஜித் மீது பற்றும் பாசமும் வைத்திருக்கின்றனர் இந்த சமயத்தில் தல ரசிகர்கள் தற்பொழுது அஜித்தை அப்படியே உரித்து வைத்தது போல ஒரு உருவ சிலையை செய்து அசத்தியுள்ளனர் அதன் புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் பதறப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

ajith
ajith