தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்டப்பிடிப்பு இன்னும் சிறிது நாட்களில் முடிவடைய உள்ளது. வாரிசு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர் அதுமட்டுமல்லாமல் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வாரிசு திரைப்படம் முடிந்து அடுத்ததாக நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதுவும் கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.
இந்த நிலையில் வாரிசு படப்பிடிப்பின் போது சில காலங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகிக்கொண்டே இருந்தது. இதனை அடுத்து வாசு திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படப்பிடிப்பு சென்னையில் ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த படம் இன்னும் பத்து நாட்களுக்குள் முடிய உள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு நடன காட்சிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜானி மாஸ்டர் அவர்கள் ஒரு தகவலை தெரிவித்துள்ளார் அதாவது வாரிசு படத்தில் நடிகர் விஜய் மாஸ் டான்ஸ் ஆடி இருப்பார் அதை திரையரங்கில் பார்க்கும் போது யாராலும் ஆடாமல் இருக்க முடியாது என ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக கூறியுள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் பொங்கல் தினத்தை சீரும் சிறப்புமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.
அதனைத் தொடர்ந்து விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.