விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி ஏழு வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து சண்டை சச்சரவுகளும் இருந்து வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது 15 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இருந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர்கள் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளார்கள். இவர்களை தொடர்ந்து ஜி.பி முத்து தன்னுடைய சொந்த பிரச்சினைகளினால் இந்நிகழ்ச்சியை விட்டு இரண்டாவது வாரம் வெளியேறினார். இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது அதில் அசீம், தனலட்சுமி, அமுதவாணன் ராபர்ட், ராம், கதிரவன், மணிகண்டா உள்ளிட்டவர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் ராபர்ட் ரட்சிதாவின் பின்னாடியே சுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். எப்பொழுது கேப் கிடைக்கும் ரட்சிதாவுடன் கடலை போடலாம் என்ற முடிவில் இருந்து வரும் ராபர்ட் சரியாக விளையாடாமல் ரட்சிதாவை பிடித்து இழுப்பது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என அந்த வேலைகளை செய்துவரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் ரட்சிதாவின் கணவர் தினேஷ் ஏற்கனவே ராபர்ட் டைப் பற்றி கூறிய நிலையில் மேலும் அவர் சோசியல் மீடியாவில் தன்னுடைய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தினேஷ் கூறியதாவது சினிமா உலகில் பல வாய்ப்புகள் கிடைத்தும் தன்னை தக்க வைத்துக் கொள்ளாத ராபர்ட்டுக்கு பிக்பாஸ் ஒரு செகண்ட் இன்னிங்ஸ்.
அதையும் கோட்டை விட்ட ராபர்ட் எலிமினேட் ஆவது தான் சரி ராம், மணிகண்டா போன்றவர்கள் பல கனவுகளோடு பிக்பாஸ்க்கு வந்துள்ளனர் அவர்களுக்கு மேலும் தொடர வோட் செய்து வாய்ப்பு அளித்தது எனக்கு சரியாக படுகிறது புதியவர்களின் கனவுகளை வெற்றி பெற வழி செய்வோம் ப்ளீஸ் வோட் ஃபார் கரெக்ட் சூஸ் என அவர் கூறி இருக்கும் அறிக்கை தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.