ஹோம் டூர் வீடியோ போட்ட ரோபோ சங்கர் குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி.! அதிரடி காமித்த வனத்துறை அதிகாரிகள்..

robo-sangar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் பிறகு தன்னுடைய காமெடி திறமையினால் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். மேலும் தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்த இவர் கடந்த 2002ஆம் ஆண்டு நடனக் கலைஞர் பிரியங்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் ரோபோ சங்கர் வீட்டில் உள்ள கிளிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு தேசிய பூங்காவில் ஒப்படைத்திருக்கும் சம்பவம் குறித்து ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா பிரபல ஊடகம் ஒன்று இருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்த கிளிகளை நாங்கள் பல காலங்களாக வளர்த்து வருகிறோம் ஒரு நாள் இரண்டு நாள் கிடையாது மூன்றரை வருடங்களாக வளர்த்து வருகிறோம் நாங்கள் இதனை வனத்துறையிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை.

birds
birds

கிளிகளை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை இது என்னுடைய தோழி ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். அவர் பரிசாக கொடுத்தது தான் எங்களுக்கும் கிளைகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அதனால் தான் அவற்றிற்கு பிகில், ஏஞ்சல் என்று பெயர் வைத்து வளர்த்தோம் அவையும் எங்களை அக்கா, அம்மா என்று தான் பேசும் குறிப்பாக என்னுடைய கணவரை ரோபோ சங்கர் என்று தான் கூறும்.

இந்த மூன்றரை ஆண்டுகள் இந்த கிளியை எங்களின் குழந்தைகள் போன்று தான் வளர்த்து வந்தோம் பரிசாக கிடைத்த கிளி என்பதினால் நாங்கள் அனுமதி பெறவில்லை அதேபோல் தான் நாங்கள் வனத்துறையிடமும் சொல்லவில்லை தற்பொழுது நாங்கள் இலங்கையில் உள்ளோம். நாங்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து கிளிகளை எடுத்து சென்று இருக்கின்றனர் நாங்கள் ஊருக்கு வந்ததும் இதைப் பற்றி விளக்கம் அளிக்க உள்ளோம் என்று பிரியங்கா கூறியுள்ளார். சமீபத்தில் பிரியங்கா தனியார் ஊடகம் ஒன்று இருக்கு ஹோம் டூர் மற்றும் குக்கிங் வீடியோக்களை எடுத்துள்ளார் அப்பொழுது கிளிகள் இருப்பது தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.