திருமணத்திற்கு பின்பு முதன்முறையாக ஜோடியாக செல்பி எடுத்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்.

gautham karthik
gautham karthik

சினிமாவில் பல நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் அவர்களில் ஒரு சிலர்கள் நன்றாக வாழ்ந்து வந்தாலும் ஒரு சிலர் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் மீண்டும் மீண்டும் சினிமா நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான் இந்த நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் திருமணம் கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய வட்டாரங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் அந்த வகையில் கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜீவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவரும் காதலித்து வந்ததையும் திருமணம் செய்து கொள்வதையும்  வெளிப்படையாக கூறாமல் மௌனமாக இருந்து வந்தார்கள் கடைசியில் இருவரும் காதலை ஒப்புக் கொண்டார்கள் அதன் பிறகு தான் திருமணம் நடைபெற்றது இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு புது தம்பதிகளான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் இணைந்து ரொமாண்டிக் செல்ஃபி புகைப்படத்தை எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த செல்பி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் கௌதம் கார்த்திக் புதிய திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் அந்த வகையில் பத்து தல, 16 ஆகஸ்ட் 1947 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் 10 தல திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதோ அவர்களின் ரொமாண்டிக் செல்ஃபி புகைப்படம்.

gautham karthik
gautham karthik