தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவந்து அசத்துகின்றன அந்த வகையில் மாரி செல்வராஜ் இடம் பெற்றுள்ளார் இவர் இதுவரை பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற சிறப்பான படங்களை கொடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது சிறு இடைவெளிக்கு பிறகு மாரி செல்வராஜ்.
உதயநிதி ஸ்டாலினுடன் முதன்முறையாக கைகோர்த்து மாமன்னன் எனும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படமும் அந்த இரண்டு படங்களைப் போலவே.. அதே சாயலில் உருவாகும் என கூறப்படுகிறது. மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் வடிவேலுவும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். செல்வராஜ் இந்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைத்துள்ளார் என முன்பே கூறப்பட்டது தற்போது ஒரு தகவல் இணையதள பக்கத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.
அதாவது நடிகர் வடிவேலு இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடிக்கிறார் எனவும் அதுவும் மாமன்னன் என்ற பெயரில் வடிவேலு ஒரு அரசியல்வாதியாக வலம் வருவார் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் வடிவேலு திறமை மற்றும் காமெடி வேடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அரசியல்வாதி கெட்டப்பில் வடிவேலு படம் நடிப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் அவரது வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.