போடுடா வெடிய.. “துணிவு ட்ரைலர்” குறித்து வெளிவந்த விமர்சனம்..! முக்கிய பிரபலம் தகவல்..

thunivu
thunivu

இயக்குனர் ஹச். வினோத் எப்போதுமே வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கக்கூடியவர் அந்த வகையில் இவர் இதுவரை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் இப்பொழுது கூட அஜித்தை வைத்து துணிவு என்னும் படத்தை தரமாக எடுத்து இருக்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறதாம் இதில் அஜித் ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார் படத்தின் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் வேற லெவலில் உருவாகி இருக்கிறதாம் அவருடன் கைகோர்த்து இந்த படத்தில் மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய்..

மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான அமீர், சிபி போன்றவர்களும் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. துணிவு படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்பொழுது அடுத்த கட்ட வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தைக் காண ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

ஆனால் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த நிலையில் துணிவு படம் குறித்து பிரபலம் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

படங்கள் குறித்து விமர்சனம் கொடுத்து வரும் சென்சார் போர்டு அதிகாரியான உமர் சந்து துணிவு திரைப்படம் குறித்து சில தகவல்களை கொடுத்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது துணிவு திரைப்படத்தின் டிரைலர் தீயாய் இருக்கிறது என்பதை சொல்லும் வகையில் எமோஜி போட்டு  கூறியுள்ளார். இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்..