vikram : நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன அதேபோல் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் மேலும் பல நடிகர்கள் சும்மா நடித்தால் போதும் என நடிப்பார்கள் ஆனால் விக்ரம் அப்படி கிடையாது ஒரு திரைப்படத்திற்கு எந்த கதாபாத்திரம் வேண்டுமோ அதை போல் தன்னுடைய உடலை வறுத்தி எடுப்பார் அந்த அளவு சினிமாவில் வெறித்தனமாக இருக்கக்கூடியவர்.
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார் அதன் பிறகு தொடர்ந்து பல தோல்வி திரைப்படங்களை கொடுத்தார் தோல்வி திரைப்படங்களை கொடுத்த விக்ரம் துவண்டு போய் சீரியலில் நடிக்க கூட முடிவெடுத்தார். கடைசியாக இவருக்கு கை கொடுத்தது சேது திரைப்படம் தன்னுடைய அடையாளத்தையே மாற்றிக் கொண்டு அதன் பிறகு நடிப்பில் முழு கவனத்தை செலுத்தினார்.
நடித்தால் படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ நம்முடைய பேர் நிலைத்து நிற்க வேண்டும் என முடிவு செய்தார் அதன் பிறகு வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் பிரம்மாண்டம் அந்த வகையில் காசி, ஜெமினி, தூள், பிதாமகன், அன்னியன், தெய்வத்திருமகள் என அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக மாறியது படத்திற்கு படம் தன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தி உடலையும் வருத்திக் கொள்வார்.
அப்படி உடலை வருத்திக்கொண்டு திறமையான நடிகராக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார் திரைத்துறையில் போட்டி பொறாமை இல்லாமல் ரசிகர்களால் எந்த ஒரு வெறுப்பும் இல்லாமல் நிலைத்து நிற்கிறார் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விக்ரம் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் பட வாய்ப்புக்காக கஷ்டப்பட்டுள்ளார். எப்படியாவது தனது திருமையை நிரூபிக்க வேண்டும் என அவர் ஏறி இறங்காத இடமே கிடையாது. அந்த வகையில் சொந்தக்காரர்களை கூட விட்டு வைக்காமல் அவர்களிடமும் உதவி கேட்டுள்ளார்.
உதவி எனத் தேடி வருபவருக்கு உதவாமல் சொந்தக்காரர்கள் அலட்சியப்படுத்தினார்கள் அந்த வகையில் நடிகர் பிரசாந்த் விக்ரமுக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரராம் விக்ரமும் பிரசாந்தும் ஒரே நேரத்தில் திரைத்துறை நோக்கி வந்தவர்கள் தான் ஆனால் பிரசாந்தின் அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பதால் அவர் மகனை மிக எளிதாக வளர்த்து விட்டார். அந்த சமயத்தில் வாய்ப்பு இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்த விக்ரம் பிரசாந்த் வீட்டு கதவை தட்டி வாய்ப்பு கேட்டுள்ளார்.
ஆனால் பிரசாந்த் குடும்பமே விக்ரமை உதாசீனப்படுத்தியது அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமை வளர்த்துக்கொண்டு படத்தில் முழு உழைப்பையும் வெளிப்படுத்தி முன்னணி நட்சத்திரமாக வளர்ந்தார். இன்று மிகப்பெரிய ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார் விக்ரம் ஆனால் பிரசாந்த் வாழ்க்கையில் அடிப்பட்டு ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார் தியாகராஜன் குடும்பமே விக்ரமை பார்த்து தலை குனிந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.