தளபதி விஜய் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த நிலையில் தனது ரூட்டை திடீரென மாற்றி ஆக்ஷன் படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் ஆக்சன் படங்கள் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் போகப்போக இவரது திரைப்படங்கள் ஹிட்டடித்த அதுவும் சாதாரண ஹிட் கிடையாது எல்லாம் மெகா ஹிட் நான்.
இப்படி தொடர்ந்து ஆக்ஷன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் சமீப காலமாக அந்த மாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ஆனால் ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அல்லது மாறுபட்ட கதைக்களம் ஆகத்தான் இருந்து வந்துள்ளன அதிலும் குறிப்பாக இவரது கேரியரில் துப்பாக்கி திரைப்படம்.
எதிர்பார்த்த அளவிற்கு மாபெரும் வசூல் வேட்டை பெற்றுத் தந்ததோடு விஜய் கேரியரில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இருந்தார். துப்பாக்கி திரைப்படம் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. தளபதி விஜய் ஒரு ராணுவ அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்த திரைப்படமும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முடியும் வரை விறுவிறுப்பாக போயிருக்கும் அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருந்ததால் மக்கள் கூட்டத்தை இந்த திரைப்படம் இழுத்தது. இந்த திரைப்படம் இதுவரை மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை அள்ளியுள்ளது. துப்பாக்கி திரைப்படம் உலகம் முழுவதும் 130 கோடியை தாண்டி சாதனை படைத்தது.
தமிழகத்தில் மட்டும் 72 கோடியை அள்ளியது. துப்பாக்கி படத்தின் ஷேர் மட்டுமே 44 கோடி அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை துப்பாக்கி திரைப்படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகிறது இந்த செய்தியை தற்போது தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அதிலும் குறிப்பாக சமூக வலைதளப் பக்கத்தில் #9yrsofATBBTthuppaki ஒன்றை நிறுவி அதை ட்ரெண்டிங்கில் வர வைத்துள்ளனர்.