பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது இந்திய அளவில் சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற இந்த பாடலை உண்மையாக மாற்றினார் ரஜினிகாந்த்.
தற்பொழுது வேணால் ரஜினி நடிப்பில் வெளிவரும் ஒரு சில திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை என்றாலும் இவரின் இளமைப் பருவத்தில் நடித்த இருந்த பல திரைப்படங்கள் தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் பெற்றுள்ளது.
இந்நிலையில் கடைசியாக இவர் நடிப்புயல் தர்பார் திரைப்படம் வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என்று கூறியுள்ளார்கள். அதோடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாகவும் டப்பிங் வேலைகள் மட்டும் உள்ளதாகவும் கூறி உள்ளார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் பாட்ஷா. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதோடு ரஜினி காந்தின் திரைப்பயணத்தில் இதுவும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு 1994ஆம் ஆண்டு நடைபெற்றது. அவ்வப்பொழுது எடுத்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.