படும் தோல்வியை சந்தித்த ரஜினி திரைப்படம்.! இதை மட்டும் செய்திருந்தால் படம் வேற லெவலில் ஹிட் ஆயிருக்கும்

rajini
rajini

80 மற்றும் 90களில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அதுமட்டுமல்லாமல் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினி அவர்கள் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு சென்னையில் ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வருகிறது அது மட்டும் அல்லாமல் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக ரஜினி படம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. முன்பெல்லாம் ரஜினி படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் கமர்சியலுக்கு பஞ்சமே இருக்காது அப்படி இவர் பல படங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் தற்போது உள்ள இயக்குனர்கள் அவரை மாசாக வைத்து படம் இயக்க நினைத்து அவருடைய படங்களை தோல்வி படங்களாக மாற்றி விடுகிறார்கள். அப்படி ரஜினிக்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர் கே எஸ் ரவிக்குமார் இவர் ரஜினியை வைத்து லிங்கா என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார்.

இந்தப் படம் எதிர்பார்க்காத தோல்வியை பெற்றுதந்தது. வேற எந்த ஒரு திரைப்படம் ரஜினியின் வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தது கிடையாது அந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய தோல்வி படமாக லிங்கா படம் அமைந்துள்ளது. எதற்காக இந்த படம் தோல்வியை சந்தித்தது என்றால் இந்த படத்தில் ரஜினிக்கு ஏற்றார் போல் நகைச்சுவையும் இல்லை கமர்சியலும் இல்லை அதனால் இந்த படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது ஆனால் இந்த படத்தில் கமர்சியல் மற்றும் நகைச்சுவை அவருக்கு செட் ஆகியிருந்தால் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும் என்று நடிகர் அனுமோகன் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.