தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து அதில் முன்னணி நடிகரை நடிக்க வைத்து திரை உலகிற்கு வெற்றியை கொடுப்பது வழக்கம். அப்படி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியதன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் ஏ ஆர் முருகதாஸ்.
தல அஜித்தை வைத்தது தீனா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இயக்கியதன் மூலம் அடுத்தடுத்த வெற்றிகளை கண்டதன் மூலம் அத்தகைய அந்தஸ்தைப் பெற்றவர்.
ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து ஓரளவு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகர்களை வைத்து இயக்க முடிவு செய்து வருகிறார் இப்படி பயணித்துக் கொண்டே இருந்தாலும் இவர் இயக்கிய படங்களில் ஒரு சில தவறுகள் உள்ளன.
அதனை தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர் ரசிகர்கள் அந்த வகையில் இவர் விஜய்யை வைத்து இயக்கி வெற்றி கண்ட திரைப்படம் துப்பாக்கி திரைப்படம். இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது இத்திரைப்படத்தில் விஜய் அவர்கள் ஒரு காட்சியில் ஜிபிஎஸ் பொறுத்துக் கொண்டு பயணிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
ஆனால் அவர் ஜிபிஎஸ் பொருத்தும் கருவி உண்மையில் ஜிபிஎஸ் கருவி அல்ல தெர்மாமீட்டர் என்பது பின்னாட்களில் தான் தெரிய வந்துள்ளது அதனை தற்போது ரசிகர்கள் சுட்டிக்காட்டி ஒரு முன்னணி இயக்குனர் இதுபோன்ற தவறுகளை செய்யலாமா என அவரை கலாய்த்து வருகின்றனர்.