ஏ. ஆர். முருகதாஸ் படத்தை நிராகரித்த 12 ஹீரோக்கள்..! கடைசியாக தட்டி தூக்கிய தமிழ் ஹீரோ – யார் தெரியுமா.?

surya
surya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா இவர் ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் போகப்போக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து இப்பொழுது வரை பெரும்பாலும் வெற்றி படங்களை தான் கொடுத்து வருகிறார்.

இப்பொழுது கூட இயக்குனர் பாலா உடன் கைகோர்த்து வணங்கான் படம், சிறுத்தை சிவா உடன் தனது 42வது திரைப்படத்தில் சூர்யா விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த இரண்டு படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா உடன் ஒரு படம்.. வெற்றிமாறனுடன் ஒரு படம் பண்ண இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அந்த காரணத்தினால் சூர்யாவின் மார்க்கெட்டும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஏ ஆர் முருகதாஸ் உடன் சூர்யா கைகோர்த்து நடித்த திரைப்படம் கஜினி.

இந்த படம் முற்றிலும் ஒரு வித்தியாசமான கதை ஆனால் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. அதனால் அவரது கதாபாத்திரம் அப்பொழுது ரசிகர்களுக்கு பிடித்தது மேலும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த படம் நடிகர் சூர்யாவுக்கு எடுத்த உடனேயே கிடைக்கவில்லையாம் கஜினி திரைப்படத்தின் கதையை இயக்குனர் முருகதாஸ் ரெடி பண்ணி முதலில் 12 ஹீரோக்களிடம் கூறியுள்ளாராம் அவர்கள் அனைவரும் ரிஜெக்ட் செய்யவே 13வதாக சூர்யாவுடன் இந்த கதை சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே ஓகே சொன்னார் என கூறப்படுகிறது இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.