துணிவு படத்தில் இடம்பெற்ற தர லோக்கல்லாக பாடல்..! பாடியது யார் தெரியுமா.?

thunivu
thunivu

நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அதனால் அவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது கூட தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஹச். வினோத் இயக்குகிறார்.

போனி கபூர் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து உள்ளது. துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா..

மற்றும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஏதேனும் அப்டேட் வந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில் தற்போது அது குறித்து ஒரு தகவலும் கிடைத்திருக்கிறது.

துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல் நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் முதல் பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடி உள்ளார் கல்யாண் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் முதல் பாடல் தர லோக்கலாக இருக்கும் என தெரிய வருகிறது.

அனிருத் இதுவரை வேற மாதிரி, அடிச்சு தூக்கு, ஆலுமா டோலுமா, அதாரு அதாரு ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார் தற்பொழுது இந்த படத்திற்கும் தரலோக்களாக அவர் பாடி இருக்கிறார் என கூறப்படுகிறது நிச்சயம் இந்த பாடலும் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.