தமிழ் சினிமாவில் எத்தனையோ தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனமாக பார்க்கப்படுவது உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கி வரும் ரெட் ஜாயிண்ட் மூவிஸ் நிறுவனம் தான் இவர்கள் தயாரிப்பு மட்டுமல்லாமல் விநியோக நிறுவனமும் நடத்தி வருகிறார்கள். படங்களை வாங்கி அதனை திரையரங்கில் திரையிட்டு தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டியதை கரெக்டாக சேர்த்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து படத்தை தயாரிப்பதிலும் விநியோகத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சில ஆண்டுகளாக படத்தை தயாரிப்பதில் மிகத் தள்ளியே இருந்தார்கள் இந்த நிலையில் கடந்த ஆண்டு அரண்மனை மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்.
இந்த நிலையில் தற்பொழுது வரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை விநியோகம் செய்து லாபம் பார்த்து வருகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் வினியோகத்தை ஆரம்பித்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை வினியோகம் செய்த அனைத்து திரைப்படங்களிலிருந்தும் கிடைத்த 1200 கோடி ஷேர்யை அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு சரியாக கொடுத்துள்ளாராம்.
அதேபோல் எந்த ஒரு முதலீடும் செய்யாமல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய விநியோகஸ்திலிருந்து 10% கமிஷனில் இருந்து பெறப்பட்ட 120 கோடி ரெட் ஜாயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எத்தனையோ பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை விநியோகம் செய்து தயாரிப்பாளர்களுக்கு சேரவேண்டிய ஷேர் சரியாக சேர்த்து வருவதால் சினிமா உலகில் பலரும் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனத்தை பாராட்டி வருகிறார்கள்.
பல விநியோகஸ்தர்கள் சரியாக லாபம் வரவில்லை என முடியும் மறைப்பார்கள் ஆனால் இவர்கள் சரியாக கணக்கு காட்டுவதால் இவர்களை பாராட்டியும் வருகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.