‘ஜவான்’ படத்தில் நடிக்க மறுத்த பிரபல தெலுங்கு நடிகர்.! ஏமாற்றத்தில் படக்குழு..

jawan-1

இயக்குனர் அட்லி தற்பொழுது பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனராக மாறியவர்தான் அட்லி. இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகத்தின் திறமைகளை கொண்டு விளங்குகிறார்.

நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா என பல நட்சத்திரங்களின் கூட்டணியில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். இதற்கு முன்பு இவர் ஷங்கரின் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த நிலையில் பிறகு தனியாக திரைப்படங்கள் இயக்குவதை தொடங்கினார். இவ்வாறு இவருடைய முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை கண்ட நிலையில் இதனை அடுத்த தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

ஆக்ஷன், சென்டிமென்ட் என கலந்த கலவையாக இந்த படங்கள் அமைந்த நிலையில் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இவ்வாறு இதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் தற்பொழுது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.

jawan
jawan

மேலும் இந்த படத்தை ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜுனனை படக்குழு அணுகியுள்ளது ஆனால் ஜவான் படத்தின் கதையை கேட்டு அல்லு அர்ஜுன் தனக்கு நடிக்க விருப்பம் இல்லை என கூறி விட்டாராம். நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நிலையில் இதனை அடுத்து தற்பொழுது இவர் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் பெரிதளவில் ஹிட் பெற்று உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கும் நிலையில் இவ்வாறு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படத்தில் நடித்தால் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படத்திற்கு உகந்ததாக இருக்காது என கூறப்படுகிறது.