கமலுடன் இணைந்த அரசியல் வாரிசு.! உச்சகட்ட பரபரப்பில் சினிமா

kamal
kamal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் கமலஹாசன் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதை எழுதுவது மற்றும் படங்கள் தயாரிப்பது என பன்முக தன்மை கொண்டு விளங்கி வருகிறார். இந்தியன்2 திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் பல திரைப்படங்களை தயாரித்து வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்போது மாமன்னன் மற்றும் கழகத் தலைவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதனை அடுத்து தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதாவது உதயநிதி ஸ்டாலின் கூறியது என்னவென்றால் சினிமா அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடுவது மிகவும் சிரமம். அரசியலை சினிமா போல் பார்க்க முடியாது முழு நேரமும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு அரசியலில் முழு ஈடுபாடு காட்டும் நேரத்தில் நெஞ்சுக்கு நீதி படத்துடன் முடிவு நினைத்தேன் ஆனால் மாரி செல்வராஜ் தன்னிடம் வந்து மாமன்னன் கதையை சொன்னதும் எனக்கு பிடித்து விட்டது அதனால் இந்த படம் கடைசியாக இருக்கட்டும் என்று நினைத்தேன்.

அதனைத் தொடர்ந்து மகிழ் திறுமேனி சொன்ன கதை களம் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பிறகு இந்த படம் தான் தனக்கு கடைசி படம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் ஒரு வரி கதை சொன்னதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது அது மட்டுமல்லாமல் அந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என்று கூறியிருந்தேன் ஆனால் இந்த படத்தில் நீங்க நடிகைகள் என்று அவர் பெருந்தன்மையுடன் கூறியிருந்தார். இதற்காகவே கமல்ஹாசன் தயாரிக்கும் அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.