ஒரு புகைப்படம் ஒரு கோடி ரூபாயா? ரஜினிக்கு அடித்த ஜாக்பாட்.! வேண்டாம் என மறுத்த சூப்பர் ஸ்டார்..இதுதான் காரணமா.?

rajini
rajini

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி அவர்கள் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க நடிகர் ரஜினி அவர்கள் தயாராக உள்ளதாகவும் இதற்காக ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு மூன்று இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினியின் புகைப்படம் ஒன்றை ஒரு கோடிக்கு விலை பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக், சுமன், ஆகியோர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படம் நடிகர் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

சிவாஜி திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் எல்லாம் தீவிரமாக நடந்தது அதுமட்டுமல்லாமல் வீதியில் எங்கும் சிவாஜி திரைப்படத்தின் போஸ்டர்கள் தான் இருந்தது அந்த அளவிற்கு இந்த திரைப்படத்திற்காக இறங்கி வேலை பார்த்தது பட குழு. இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஆம் சித்ரா லட்சுமணன் அவர்கள் சிவாஜி திரைப்படம் வெளிவந்த போது ஒரு பிரபல சென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ரஜினியின் புகைப்படம் ஒன்றை தனது நிறுவனத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் ஏவிஎம் குகனை அணுகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்திற்காக ஒரு கோடி விலை பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ரஜினி இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். அது என்ன காரணம் என்றால் என்னுடைய ரசிகர்கள் எனது நடிப்பை பார்ப்பதற்காக சினிமாவிற்கு வருகிறார்கள் இந்த சென்ட் விளம்பரத்தில் எனது புகைப்படம் இடம்பெற்றால் நான் அந்த செண்டைதான் பயன்படுத்துகிறேன் என நினைத்துக் ரசிகர்களும் பயன்படுத்துவார்கள் இதனால் அவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை என்று ரஜினி அவர்கள் கூறியுள்ளதாக தயாரிப்பாளர் சித்தரா லட்சுமணன் கூறியுள்ளார்.