தமிழ் சினிமாவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர். இவருடைய மகன் தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
விஜயை தொடர்ந்து எஸ். ஏ. சந்திரசேகருக்கு வித்யா என்ற இளைய மகள் இருந்தார். ஆனால் அந்த குழந்தையும் இளம் வயதிலேயே இறந்து விட்டாராம் அவரது 37 வது நினைவு நாளை ஒட்டி நேற்று எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவையும் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது. என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத தினம் மே 20 என குறிப்பிட்டுள்ளார்.
விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் வெளியிட அந்த பதிவை பார்த்து விஜய் ரசிகர்கள் தற்போது அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது அப்பாவைப் போலவே விஜய்யும் தனது தங்கையின் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார் அதை அவரும் பல மேடைகளில் சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய்யின் பெரும்பாலான படங்களில் தங்கை சென்டிமென்ட் அதிகம் இருக்கும் அந்தப் படங்களும் ஹிட் அடித்துள்ளது அந்த வகையில் கில்லி, சிவகாசி போன்ற படங்களில் அண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் விஜய் சூப்பராக நடித்திருப்பார். இப்பொழுதும் தங்கையை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்.
தளபதி விஜய் இப்பொழுது தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை வம்சி இயக்குகிறார் மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப சென்டிமென்ட் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் 66 திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது இந்த படத்திலும் தங்கை சென்டிமென்ட் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.