நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது இப்படி ஒரு போட்டோ ஷூட்டா..! இதெல்லாம் இப்போ உங்களுக்கு சாதாரணமா போயிடுச்சு..!

neelima-rani-3

முன்பெல்லாம் போட்டோஷூட் எடுப்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக அமைந்தது ஆனால் தற்போதெல்லாம் நினைத்த நேரத்தில் எல்லாம் நடிகைகள் போட்டோ ஷூட் எடுத்து அதனை உடனே சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அதிலும் சின்னத்திரை நடிகைகள் கொடுக்கும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏனெனில் இவர்கள் திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு பின்பு என போட்டோ ஷூட் நடத்தி வருவது மட்டுமில்லாமல் கர்ப்பகால போட்டோ ஷூட் எனஒரு கேப்டனை உருவாக்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பல்வேறு நடிகைகள் புகைப்படம் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் வில்லியாக  பல்வேறு சீரியல்களில் நடித்த புகழ்பெற்ற நீலிமாவும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை நீலிமா ராணிக்கு ஏற்கனவே அதிதி என்ற ஒரு மகள் உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்போது நடிகை நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்துவருகிறார் இந்நிலையில் வாயும் வயிறும் ஆக இருக்கும் பொழுது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த போட்டோஷூட்டில் கோவிலில் அவர் அமர்ந்திருப்பது போல இருப்பது மட்டுமின்றி அவர் தாமரை மேல் அமர்ந்திருந்த படி போஸ் கொடுத்துள்ளார். இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

பொதுவாக முன்பெல்லாம் பெண்கள் தங்கள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வெளியில் சொல்லாமல் மௌனம் காத்து வருவார்கள் ஆனால் தற்போது இதனை போட்டோ ஷூட் மூலமாக புகைப்படம் எடுத்து அதனை வைரலாகி வருகிறார்கள்.

neelima rani-1
neelima rani-1

சமீபத்தில் கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்திய பரினா தற்போது குழந்தை பெற்ற நிலையில் தற்போது  நீலிமாவும் அதே போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் தற்போது நீலிமா ராணிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

neelima rani-2