மகனுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா.! ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படம்.!

dhanush

நடிகர் தனுஷ் சினிமாவில் இளம் வயதிலேயே ஹீரோவாக என்ட்ரி ஆகி பல படங்களை கொடுத்துள்ளார். இவரது படங்கள் சில படங்கள் தோல்வி அடைந்தாலும் பல படங்கள் வெற்றியை பெற்றது. இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் அதிக அளவு வசூலை ஈட்ட வில்லை என்றாலும் மக்கள் மத்தியில் சிறந்த பெயரை பெரும் சிறப்பான கதை அம்சம் உள்ள படமாக அமையும்.

அந்த வகையில் தற்போது கூட இயக்குனர் மித்ரன் ஜவகர் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படத்தை கொடுத்தார் இந்த படம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. தனுஷின் இந்த படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகியுள்ளது. அதனால் தான் ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படமும் ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து வாத்தி, நானே வருவேன் ஆகிய இரு படங்களில் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் ரஜினியின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டு இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.

குடும்ப வாழ்க்கையை நீண்ட வருடங்களாக சிறப்பாக வாழ்ந்து வந்த இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிவதாக கூறியுள்ளனர் இந்த செய்தியை சினிமா பிரபலங்கள் முதல் கொண்டு மக்கள் வரை பலரையும் வருத்தமடைய செய்தது. இரு வீட்டார் குடும்பத்தில் இருந்தும் இருவரையும் சமாதானப்படுத்தி வாழவைக்க பல முயற்சிகளை செய்தனர்.

ஆனால் இருவரும் அவர்களது முடிவில் விட்டுக் கொடுக்காமல் இருக்கின்றனர் இந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்காக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களது மகன்களுடன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

dhanush
dhanush