சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டருடன் ஒரு தனிப்பட்ட படம்.! லோகேஷ் கனகராஜ் அதிரடி..

rolex
rolex

தென்னிந்திய சினிமாவில்  குறுகிய ஆண்டில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி தற்போது தயாரிப்பாளர்களால் தேடப்பட்டு வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், ஆகிய திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது அதிலும் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மூன்று திரைப்படங்களுமே ரசிகர்களால் கொண்டாட கூடிய ஒரு திரைப்படமாக அமைந்தது. கமல், பகத் பாசில், சூர்யா,  விஜய் சேதுபதி, உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகி பல சாதனைகளையும் படைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தங்களுடைய இரண்டாவது கூட்டணியான தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளனர் இந்த திரைப்படம் எல்சியுவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

கைதி மற்றும் விக்ரம் ஏற்கனவே இரண்டு படங்களும் ஒரே கதையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது அதேபோல தளபதி 67 திரைப்படமும் விக்ரம் கைதியுடன் இணை இருக்கிறது இதனால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் வந்து தியேட்டரையே தெறிக்க விட்ட  ரொலெக்ஸ் கதாபாத்திரத்தை தனிப்பட்ட முறையில் படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

rolex
rolex

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா அந்த கடைசியில் ஐந்து நிமிடத்தில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார் அந்த அதிர்ச்சியில் இருந்து மீலாத ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தரும் விதமாக சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டருடன் அனேகமாக ஒரு தனிப்பட்ட படம் எடுக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் மேலும் குஷியில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் தனிப்பட்ட படமாக எடுத்தால் வேற லெவலில் இருக்கும் என கூறி வருகின்றனர். ஐந்து நிமிடத்தில் கலக்கிய ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மூணு மணி நேரம் காட்டினால் இன்னும் அருமையாக இருக்கும் அது மட்டுமல்லாமல் ரசிகர்களும் கொண்டாடுவார்கள் என்று கூறி வருகின்றனர்.