தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். வடசென்னை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது.
வடசென்னை முதல் பாகத்தை தொடர்ந்த இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தங்களக்கு நடந்த அந்தரங்க சீண்டல்கள் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.
அதில் நடிகை ஆண்ட்ரியா தான் 11 வயது இருக்கும் போது பேருந்தில் தனது தந்தையுடன் சென்றிருந்தேன் அப்போது எனது அருகில் உட்கார்ந்து இருந்த ஒரு நபர் எனது சட்டைக்குள் கையை விட்டு உடலை சீண்டிய போது நான் என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு சென்று விட்டேன்.
இதைப் பற்றி என்னுடைய தந்தையிடம் அம்மாவிடமும் எதுவுமே கூறவில்லை. நான் ஏன் அப்படி செய்தேன் என தனக்கு இப்போது வரை புரியாமல் இருக்கிறது. இதேபோல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் தனக்கு நடந்த அந்தரங்க சீண்டல்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது தனக்கு நடந்த அந்தரங்க சீண்டல் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார் அதில் அவர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு நபர் ஐஸ்வர்யா ராஜேஷ் மேல் கை வைத்திருக்கிறார் அப்போது அந்த ஆட்டோவை நிறுத்தி அந்த நபரை இல்லாத கெட்ட வார்த்தைகளை பேசி அங்கு உள்ள அனைவரையும் வைத்து அந்த நபரை அடிக்க வைத்துள்ளாராம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவ்வாறு ஆண்ட்ரியாவும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெவ்வேறு பேட்டியில் தங்களுடைய அந்தரங்க சீண்டலை பற்றி கூறியுள்ளனர்.
இதில் நடிகை ஆண்ட்ரியா சொன்ன பதில் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது அதாவது ஆண்ட்ரியா எப்போதுமே வெளிப்படையாக பேசக் கூடியவர் அது மட்டுமல்லாமல் தனக்குத் தோன்றியதை வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு போல்டான நடிகை ஆனால் அவர் தன்னை சீண்டியவரை கண்டு கொள்ளாமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.