மறுபடியும் ஒரு வடசென்னையா..! பக்காவா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் வெற்றிமாறன்..!

தமிழ் சினிமாவில்  வெற்றி இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தனுஷை வைத்து ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் அதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

பொதுவாக வெற்றிமாறன் ஒரு திரைப்படத்தை இயக்கினார் என்றால் அந்த திரைப்படத்திற்கு கண்டிப்பாக விருது நிச்சயம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இதன் காரணமாகவே  பல்வேறு நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற ஒரு திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார் இதை அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தையும் இயக்கவுள்ளார். இவ்வாறு வாடிவாசல் திரைப்படத்தை இயக்க ஒரு மிகப்பெரிய ஜல்லிக்கட்டு செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தான் இயக்கிய வடசென்னை திரைப்படத்தை கூட வெப் தொடராக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். இவ்வாறு இந்த வடசென்னை திரைப்படத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து ஹிட்டுக்கொடுத்த திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தை தற்போது வெற்றிமாறன் தொடராக இயக்க முன் வந்ததாகவும் இதனை முன்னணி ஓட்டிட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தொடரில் கென் கருணாஸ் அவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தொடருக்கு பெயர் ராஜன் வகையறா என்று சூட்டப்பட்டது மட்டுமல்லாமல் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் இந்த கதையை எழுதி வருகிறாராம்  மேலும் இந்த தொடரானது விடுதலை வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தொடங்கும் என வெற்றிமாறன் கூரியுள்ளதாக தெரிய வருகிறது.

vada chennai-1
vada chennai-1