Jailer Movie: ஜெயிலர் படத்திலிருந்து முக்கிய காட்சி நீக்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு போட்டு இருக்கும் நிலையில் இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் ஜெயிலர் படம் வெளியான நிலையில் இந்த படம் வெளியான இரண்டு வாரங்களில் பல கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி தற்பொழுது வரையிலும் சுமார் 600 கோடி வசூலை நெருங்கி இருக்கும் என கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க இவர்களை தொடர்ந்து ரஜினியின் மகனாக வசந்த் ரவியும், மருமகளாக மிர்னாவும் நடித்திருந்தனர். மேலும் தமன்னா, சுனில், யோகி பாபு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர்கள் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
பீஸ்ட் படத் தோல்விக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் கதை சுமாராக இருந்தாலும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது. இவ்வாறு இப்படிப்பட்ட நிலையில் ஜெயிலர் படத்தில் இருந்து ஒரு காட்சியை நீக்க டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது ஜெயிலர் படத்தில் RCB அணியின் ஜெஸ்ஸி அணிந்து குணசத்திர நடிகர் ஒருவர் நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே அவருடைய காட்சி இடம் பெற்றிருந்தது அதில் அவர் பெண்ணுக்கு எதிராக சில கருத்துக்களை பேசும்படி காட்சி இடம்பெற்றது இது போல் தங்களின் ஜெஸ்ஸியை அணிந்து கொண்டு பேசுவதால் எங்கள் அணியின் நட்பெயர் கெட்டுப் போகும் என கூறி ஐபிஎல் அணியான RBC அணியின் தரப்பிலிருந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது எனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் RCB அணியின் ஜெஸ்ஸி அணிந்து படமாக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க கோரி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார். மேலும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தலங்களிலும் இந்த காட்சி ஒளிபரப்பாகும் பொழுது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.