பீஸ்ட் படத்தால்.. விஜயின் வாரிசு படத்திற்கு வந்த புதிய சிக்கல்.? முழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்..

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருவர் தளபதி விஜய் இவர் ரஜினிக்கு பிறகு அதிக ஹிட் படங்கள் கொடுத்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் இவர் தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

தில் ராஜு மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங்  தற்பொழுது  சென்னையில் உள்ள எண்ணூரில்  இறுதி கட்ட படப்பிடிப்பை எடுத்து வருகிறது. அண்மையில் கூட தளபதி விஜய் படப்பிடிப்பின் பொழுது ரசிகர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66 திரைப்படம் ஒரு சென்டிமென்ட், ஆக்சன், காமெடி கலந்த ஒரு திரைப்படம் ஆக உருவாக்கி வருகிறது இந்த படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதுவரை இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதனைத் தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை மட்டுமே வெளியாகி உள்ளது..

சூட்டிங் முடிந்த பிறகு இந்த படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்ன தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில்  வாரிசு படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட்  என இரண்டுமே விற்று உள்ள நிலையில்  தமிழக விநியோக வியாபாரம் மற்றும் விற்கப்படவில்லை..

தமிழகத்திற்கான விநியோக வியாபாரத்தை மட்டுமே 80 கோடிக்கு விலை சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் 82 கோடி ஷேர் செய்துள்ளது இதனால் தான் வாரிசு திரைப்படத்திற்கு இந்த விலை என கூறி இருக்கிறார் ஆனால்  விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஷ்ட திரைப்படம் 60 கோடி மட்டுமே ஷேர் செய்துள்ளது. இதனால் வாரிசு திரைப்படத்தை 80 கோடிக்கு வாங்க தயங்குகிறார்களாம்.