தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விமர்சன ரீதியாக தோல்வியடைந்ததால் தற்போதும் வாரிசு படத்துருக்கு ரசிகர்கள் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. மேலும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, எஸ் ஜே சூர்யா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், உள்ளிட்டா பல முன்னணி நச்சத்திர பட்டாலமுமே இந்த திரைப்படங்கள் நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வாரிசு படம் வெளியாவதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் ரிலீஸ் பணிகளை மிக தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து வாரிசு படத்திலிருந்து சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஒரு குடும்ப செண்டிமெண்டாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என பொறுத்திருந்து பார்ப்போம் இது ஒரு பக்கம் இருக்க தற்போது வாரிசு படத்திற்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் வாரசுடு படத்தை ஜனவரி 11ஆம் தேதி வெளியிடாமல் இரண்டு நாட்கள் கழித்து ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தற்போது திடீர் மாற்றத்தை கொடுத்துள்ளார்கள் இதனால் பயங்கர கடுப்பில் இருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள்.
இத்தனை நாட்களாக எதிர்பார்த்து வந்த தளபதி ரசிகர்கள் 11-ம் தேதி படம் ரிலீஸ் என்பதால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ஆனால் திடீரென 11ஆம் தேதி படத்தை வெளியிடாமல் இரண்டு நாட்கள் கழித்து வெளியிடுவதால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.