தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபாஸ் இவர் ராஜமொலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி இரண்டு பாகங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் அவர்கள் நடித்துள்ளார் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் படம் குறித்த பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் ஆதி புருஷ் படம் ரஜினியின் கோச்சடையான் படம் போல இருக்கிறது என்றும் இது ஒரு சுட்டி டிவி படம் போல் இருக்கிறது என்றும் அந்த படத்தைப் பார்த்து கலாய்த்து வருகிறார்கள் நெடிசங்கள் இது ஒரு பக்கம் இருக்க ஆதி புருஷ் படத்தை வெளியிடக்கூடாது என்றும் அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என்றும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு தற்போது ஒரு கோரிக்கையை வெளியிட்டுள்ளார் இதனால் ஆதி புருஷ் பட இயக்குனருக்கு ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆதி புருஷ் படத்தில் ராமராக நடித்துள்ள நடிகர் பிரபாஸ் செங்கோட்டையில் நடந்த சதாரா விழாவில் கலந்துகொண்டு ராவண பொம்மையை அம்பு விட்டு எரித்த சம்பவம் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மறுபக்கம் இந்த படத்திற்கு எதிராக படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிற குரலும் கிளம்பியுள்ளன அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை குருவான சத்தியேந்திர தாஸ் ஆதி புருஷ் படத்திற்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.