சின்னத்திரை டிவி தொலைக்காட்சிகளில் பல புது கதைகளத்துடன் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் ஒரு சில சீரியல்கள் தான் மக்களின் ஃபேவரட் சீரியலாக இருந்து வருகின்றன. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவு பெற்ற சரவணன் மீனாட்சி என்ற தொடர் மக்கள் பலருக்கும் மறக்க முடியாத ஒரு சீரியலாகும்.
அந்த அளவிற்கு அந்த சீரியல் காதல் அன்பு பாசம் போன்ற அனைத்தும் நிறைந்து காணப்பட்டதால் அதை பலரும் ரசித்து பார்த்து வந்தனர். இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளும் தற்போது மக்கள் மத்தியில் பெரியளவு பிரபலம் அடைந்து அடுத்தடுத்து தனது பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்
அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ரக்ஷிதா. இந்த சீரியலுக்கு பின்பு ரக்ஷிதா நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். சில காரணங்களால் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் பாதியிலே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வருகிறார். இந்த நிலையில் ரக்ஷிதாவிற்கு வெப் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரக்ஷிதாவிற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் பல பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது