சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம்.! ஹீரோயின்னாக நடிக்க போவது இந்த முன்னணி நடிகையா.?

surya-

நடிகர் சூர்யா அண்மைகாலமாக சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க இயக்குனர் பாலா உடன் கைகோர்த்து சூர்யா.

தனது 41 வது திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது இந்த படத்தை முடித்த பிறகு நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் அடுத்த படத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சிறுத்தை சிவா ஏற்கனவே கதை எல்லாம் ரெடி செய்து சூர்யாவிடம் சொல்லிவிட்டாராம் இந்த படத்தின் சூட்டிங் கோவாவில் படமாக்கப்படும் என தெரிய வருகிறது. தற்போது படத்தின் கதைக்கு ஏற்றபடி மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறாராம். அந்த வகையில் இந்த படத்திற்கு சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும்..

ஒரு நடிகை உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாரும் அல்ல தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹேக்டே தான் தற்பொழுது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க சிறுத்தை சிவா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

pooja hegde
pooja hegde

இதற்கான பேச்சுவார்த்தை தற்போது போய்க்கொண்டிருக்கிறதாம் கால்ஷீட் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான ஆக்சன் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.